Covid 19 தடுப்பூசி பெற்றவர்களுக்கு “டிஜிட்டல் அட்டை” தயாரிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன….. ஜயந்த டி சில்வா!!
கொவிட் தடுப்பூசி பூரணமாக ஏற்றிக்கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டை தயாரிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன என துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா (Jeyantha De Silva) தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, தற்போது பூரணமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, வெளிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்கு முதற்கட்டமாக குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
<
அதனடிப்படையில், QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் டிஜிட்டல் அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், போலியான அட்டையை தயாரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் முழுமையான பாதுகாப்புடன் குறித்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.