சற்று முன்னர் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தற்போது கொரோனா தொற்றாளர்கள் 21 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 559 பேரினால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 204 என கடற்படை பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் பொது மக்கள் தொடர்ந்தும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இன்னமும் கொரோனா அபாயம் நீங்கவில்லை என்றும், பொது மக்கள் விழிப்பாக செயல்படுவதுடன், சுகாதார வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap