கொரோனா சிகிச்சைக்கு தடுப்பூசி தயார்: பெருமிதம் கொள்ளும் ஜேர்மன்!

உலகளவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது.

ஜேர்மன் நாட்டை சேர்ந்த க்யூர்வேக் என்ற நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத குறித்த நிறுவனத்துடன் இணைந்து டியுபிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது.

தடுப்பூசி உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், முதலில் பரிசோதித்து பார்ப்பதற்காக ஜேர்மன் மற்றும் பெல்ஜியத்தில் இருந்து 144 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பரிசோதனைக்கு பின்னர் தடுப்பூசிக்கு அங்கிகாரம் கிடைக்கும் என்று பீட்டர் கிரம்ஸ்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap