கொரோனா நோயாளர்களின் தொகை சற்றுமுன் அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2768ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நால்வரும் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கா வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தொற்றுக்குள்ளாகி 654 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தொற்றிலிருந்து 2103 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap