கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோரவிபத்து! பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு

பதுளை – பசறை வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் 46இற்கும் ஆமற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளகியுள்ளதுடன் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிந்தோரின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *