மீண்டும் ஆரம்பமானது….. கொழும்பு – யாழ் .புகையிரத சேவை!!
கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவை இன்று(15/07/2023) மீள செயற்பட ஆரம்பித்துள்ளது.
அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக
கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணத்துக்கான நேரடி தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது.
மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் தூரம் உள்ள நிலையில்
இந்திய நிதியுதவியின் கீழ் அதன் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
97.27 மில்லியன் டொலர் செலவில் குறித்த தொடருந்து மார்க்கத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருத்தப் பணிகள் நிறைவுற்ற நிலையில்,
இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான புகையிரத மார்க்கம்
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நேற்று முன்தினம் (13/07/2023) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டடது.
இந்த நிலையில்,
கொழும்புக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புகையிரத சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று(15/07/2023) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.