FEATUREDLatestNewsTOP STORIES

9 வயது சிறுமி ‘ஆயிஷா’ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் கைது….. மேலுமொருவர் மீது காவல்துறை சந்தேகம் !!

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது.

குறித்த நபரின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் சேறு படிந்திருந்த சாரம் ஒன்றையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கீரை தோட்டத்தை அண்டிய காணியில் சதுப்பு நிலம் ஒன்றிலேயே, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதென காவல்துறையினர் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் பிரேதப் பரிசோதனை நேற்று பாணந்துரை வைத்தியசாலையில் நடைபெற்றது.

இதேவேளை,

சிறுமியின் கொலை தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் மேலும் ஐந்து காவல்துறையினர் கொண்ட குழுக்களின் கூட்டு முயற்சியில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய,

அப்பகுதியில் சிசிடிவி கமராவின் காட்சிகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கபல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்த ஒருவரையும் மற்றுமொருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பண்டாரகம, அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா அக்ரம் என்ற சிறுமி கடந்த 27ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோழிக்கடையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.

சிறுமியின் சடலம் மறுநாள் பிற்பகல் வீட்டிற்கு சற்று அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும்,

சம்பவம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட 30 பேரின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுமியின் கொலை தொடர்பாக மேலும் ஒருவர் மீது காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

28 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், குறித்த நபர் சிறுமியின் தந்தையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்தமை காவல்துறையினர் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி காணாமல் போனதையடுத்து அந்த பிரதேசம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, ​​28 வயதுடைய அந்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமி கொல்லப்படுவதற்கு முன்னர் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், இன்று (30) நடத்தப்படும் பிரேத பரிசோதனையின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.

சிறுமி காணாமல் போன தினத்தில் கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்ற போது குறித்த 28 வயதுடைய நபர் நடைபாதையில் இருந்ததாக  காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பின்னர் அவர் சிறுமியை சதுப்பு நிலத்தை நோக்கி இழுத்துச் சென்றதாகவும், சிறுமி கத்தத் தொடங்கியதால் சேற்றில் முகத்தை வைத்திருக்கும் போது அவர் இறந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுமியை வீதியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சிறுமி ஒருவர் பார்த்துவிட்டு வீதியில் தனியாக இருப்பது குறித்து விசாரித்து விட்டு சென்றதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தாத்தா வரும் வரை காத்திருக்கின்றேன் என சிறுமி ஆயிஷா தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட காவல்துறை குழுவொன்று அட்டுலுகமவுக்குச் சென்று குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

பண்டாரகம பொலிஸார் கிராம மக்களின் உதவியுடன் இந்த குற்றத்தின் மறைக்கப்பட்ட விபரங்களை வெளிக்கொணர முடிந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *