சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி: ஆனால் இவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்கிறது மத்திய அரசு

வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தலாம் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை சினமா ஷூட்டிங் நடத்தப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
மத்திய அரசுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பில் இருந்தும் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகள்:-
1. படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
2. 6 அடி சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
3. குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும்
4. படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது
5. மைக் போன்ற பொருட்களை பயன்படுத்திய பிறகு நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.
6. உடைகள், விக், ஒப்பனை பொருட்களை பகிர்ந்து கொள்வதை முடிந்து அளவிற்கு தவிர்க்க வேண்டும்.
7. கேமரா முன் நிற்கும்போது தவிர மற்ற நேரங்களில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்
8. உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம்
9. ஒப்பனை கலைஞர்கள் பாதுகாப்பு கவசம் அணிய  வேண்டும்.
10. வெளிப்புற படப்பிடிப்பின்போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *