சீனாவிற்கு நாளையதினம் செலுத்தப்படவுள்ள மில்லியன் கணக்கான டொலர்
சீன உர நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளை(07) செலுத்தப்படுமென மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
பக்ரீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கே இந்த பெருந்தொகை நிதி செலுத்தப்படவுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்கள் வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த நிதியை செலுத்தாத காரணத்தால் மக்கள்வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.