03 விண்வெளி வீரர்களுடன் ‘லோங் மார்ச் – 2 எஃப் ரொக்கட்’ விண்ணில் ஏவப்பட்டது!!

சீன விண்வெளி வீரர்கள் மூவருடன் ஷென்சென் 14 விண்கலத்தை சுமந்து செல்லும் லோங் மார்ச் – 2 எஃப் ரொக்கட் சற்றுமுன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இது 6 மணி நேரத்தில் Tianhe விண்கல கட்டமைப்புடன் தானாக இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.

இதற்காக பல கட்டங்களாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வரும் சீனா அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே,

இதற்காக பல முறை விண்கல கட்டமைப்புகளை விண்வெளிக்கு அனுப்பியுள்ள சீனா,

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஷென்சோ 13 விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை அனுப்பியது.

6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஷென்சோ 13 குழுவினர் மங்கோலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் தரையிறங்கி சமீபத்தில் பூமிக்கு திரும்பினர்.

இந்நிலையில்,

மீண்டும் அடுத்த கட்டமாக சீனா தனது புதிய விண்வெளி நிலையத்திற்கு மேலும் மூன்று விண்வெளி வீரர்களை ஜூன் மாதத்தில் அனுப்ப ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தது.

இதற்கமைய,

வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 10:44 மணிக்கு (02.44 GMT) 3 சீன விண்வெளி வீரர்களுடன் லோங் மார்ச் – 2 எஃப் ரொக்கட் விண்ணில் ஏவப்பட்டது.

 

இது தொடர்பான உத்தியோகபூர்வ Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக………………..

 

இவர்கள் ஆறு மாதங்கள் விண்ணில் தங்கியிருந்து விண்வெளி நிலையத்தின் வெண்டியன் மற்றும் மெங்டியன் என்ற இரண்டு தொகுதிகளை சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *