உலகை பீதியடைய வைத்த சீன ரொக்கெட்! இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக தகவல்

சீனா விண்வெளிக்கு அனுப்பிய விண்கலத்தின் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக விண்வெளி குறித்து ஆய்வு செய்து வரும் ஸ்பேஸ் டிராக் முகமை உறுதிசெய்துள்ளது.

சீனா விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி லோங் மார்ச் – 5பி ரொக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது.

அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தி ரொக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது. அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ரொக்கெட் இழந்தது.

எனவே எந்த நேரமும் அந்த ரொக்கெட் பாகம் பூமியில் விழும் சூழல் ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது.

18 டொன் எடை கொண்ட ரொக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது.

அதன்படி, ரொக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று மாலைதிவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( international space station ) இல் ஆய்வுகளை நடத்த அமெரிக்கா சீனாவை அனுமதிப்பதிக்கவில்லை. இந்நிலையில் சீனா தாம் ஒரு விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *