மத்திய மலைநாட்டு பகுதிகளில் தொடரும்தொடரும் காட்டு தீ!!

மத்திய மலைநாட்டு பகுதிகளில் காட்டு தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்த இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான வானிலையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை,

மனித செயற்பாடுகளே, இந்த காட்டு தீ சம்பவங்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணம் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நுவரேலியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரஞ்ஜித் அலஹகோன் (Ranjit Alahagon) தெரிவித்துள்ளார்.

காடுகளில் தீ வைக்கும் சம்பவங்கள் குறித்து தகவல் அறியும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு அவர், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹட்டன் காசல்ரீ நீர்தேக்கத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் கரையோர பகுதியான சமர்வில் பகுதியில் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டதால் இரண்டு ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *