35 நாடுகள் கலந்துகொள்ளும் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய விவசாய மாநாடு நாளை இலங்கையில்!!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடானது நாளை (18/02/2024) ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம் திகதிவரையான 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பல நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து Read More

Read more

34000km உயரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்தியாவின் அடுத்த செயற்கைக்கோள் இன்று மாலை புறப்பட தயார்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘இன்சாட்-3 டிஎஸ்‘(INSAT-3DS) எனும் செயற்கைக் கோளை இன்று(17/02/2024) விண்ணில் ஏவவுள்ளது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளது. இன்சாட்-3டிஎஸ்(INSAT-3DS) செயற்கைக்கோள் 2275 கிலோ எடையுடன் 25 விதமான ஆய்வுக் கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் Read More

Read more

இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க பொது இராஜதந்திர துணைச் செயலாளர்!!

அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இம்மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையான 11 நாட்களும் ஜோர்தான், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு அவர் விஜயம் செய்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது. நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக இந்த விஜயம் அமைகின்றது. இதேவேளை, அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை Read More

Read more

5000 பெண்களுள் தேடி மனைவியை AI தொழில்நுட்பம் வாயிலாக கண்டுபிடித்த நபர்….. வைரலான கருத்து!!

மனைவியை AI தொழில்நுட்பம் வாயிலாக கண்டுபிடித்ததாக நபர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் வைரலாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் ஜாதன்(Alexander Zathan)(வயது 23). Softwere ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ChatGPT மற்றும் பிற AI போட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் 1 வருடத்தில் 5000 பெண்களைச் சந்தித்துள்ளார். மேலும், “AI  Soulmate” ஆன கரினா இம்ரானோவ்னா என்ற பெண்ணை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரே கூறுகையில், இந்த AI chatbot இல் நான் எப்படி தொடர்புகொள்கிறேன் Read More

Read more

மக்களவை தேர்தலிலிருந்து ஓய்வுபெறவுள்ள சோனியா காந்தி….. பிரியங்கா காந்தியிடம் ஒப்படைக்க திட்டமென தகவல்கள் வெளியீடு!!

மக்களவை தேர்தலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கசியில் அனைத்து வேட்பாளர்களும் படுத்தோல்வியை சந்தித்தனர். அங்குள்ள ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து நான்கு முறை (2004, 2009, 2014, 2019) வெற்றிமாலை சூடி 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த தொகுதியில் எம்.பியாக உள்ளார். தற்போது நடப்பாண்டின் மக்களவை தேர்தலில் உடல் நலகுறைவு காரணமால் அவர் Read More

Read more

30000 இந்திய மாணவர்களை French படிக்காமலே பல்கலைக்கழகங்களில் கல்விகற்க, பின் வேலைக்கு அமர்த்துவதற்கு உள்வாங்க அனுமதி….. பிரான்ஸ் அரசு அதிரடி!!

30000 இந்திய மாணவர்களை பிரான்சிலுள்ள அதன் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்விகற்க அனுமதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 30000 இந்திய மாணவர்களை பிரான்சிற்கு உள்வாங்கவுள்ள பிரான்ஸின் திட்டத்தை அறிவித்துள்ளது. இது இந்தியாவுடனான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ள இலட்சியமான திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள பல்வேறு அம்சங்கள் என்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய மாணவர்களுக்கு Read More

Read more

புலம்பெயர்ந்தோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரெஞ்சு குடியுரிமை கிடைக்காது….. பிரெஞ்சு அரசு அதிரடி அறிவிப்பு!!

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் வாழும் புலம்பெயர்ந்தோரின் உரிமை ஒன்றைப் பறிக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஒன்றிலுள்ள இரண்டு தீவுகள், 1973 ஆம் ஆண்டு பிரான்சுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தன. அவை பிரான்சின் கடல் கடந்த பிரதேசமாக Mayotte என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு, Mayotte முழுமையாக பிரான்சின் ஒரு பகுதியாக ஆனது. அதே தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த மற்ற தீவுகள் சுதந்திரம் கோரி தற்போது Comoros தீவுகள் என அழைக்கப்படுகின்றன. Read More

Read more

விவாகரத்து பெறும் சராசரி வயது 48 என அறிவித்த கனடா…. அதிகரிக்கும் விவாகரத்துகள்!!

கனடாவில் வயது முதிர்ந்தவர்களின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்துச் செல்லவதாக தெரியவந்துள்ளது. இந்த விவாகரத்துக்களின் காரணமாக ஆண்களை விடவும் பெண்களே பெருமளவில் பாதிப்படைய வாய்ப்புக்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. அதேவேளை, கனடாவில் சராசரியாக விவாகரத்து பெற்றுக் கொள்வோரின் வயதெல்லை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. வயது கூடிய நிலையில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக விவாகரத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் சராசரி வயது 48 என கனடிய புள்ளி Read More

Read more

Football மைதானத்தில் மின்னல் தாக்கி இறந்த வீரர்….. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் (காணொளி)!!

இந்தோனேஷியாவில் கால்பந்து வீரர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த குறித்த வீரரை மின்னல் தாக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவின் சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையேயான கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன் போது, மைதானத்தில் தனியாக நின்று பந்தின் வருகைக்காக Read More

Read more

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள், செலவுகளை எளிதாக்க வேண்டும்….. ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சித் திட்ட பலன்களை இழக்க நேரிடும்….. பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை! !

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள் மற்றும் செலவுகளை எளிதாக்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், குறித்த நடவடிக்கையை பிரித்தானியா மேற்கொள்ளவிட்டால் ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சி திட்டத்தின் முழுப் பலன்களையும் இழக்க நேரிடும் என அந்த ஒன்றியம் எச்சரித்துள்ளது. லண்டனுக்கான தனது உத்தியோகப்பூர்வ பணயத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி ஆணையர் இலியானா இவனோவா இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக அவர் Read More

Read more