TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தி….. உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி போராட்டம்!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்(Base Hospital – Mannar) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (13/08/2024) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சற்றுமுன்னர் வெளியானது தமிழ் பொதுவேட்பாளரின் பெயர்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும் பொது வேட்பாளர் தெரிவுக்கான குழுவின் உறுப்பினருமான என்.ஸ்ரீகாந்தா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை (08) யாழ்ப்பாணத்தில் (jaffna) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் வேட்பாளர்களுக்கான Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

அன்புள்ள கணவரே, உங்களை நான் விவாகரத்து செய்கிறேன் – உங்கள் முன்னாள் மனைவி….. டுபாய் இளவரசி அதிர்ச்சி பதிவு!!

டுபாய் இளவரசி(Princess of Dubai) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் மற்றும் துணை அதிபர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா துபாயின் இளவரசியாக இருந்து வருகிறார். ஷேக்கா மஹ்ராவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பிப் முஹம்மது பின் ராஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

கனடாவில் விமானப் பயணங்கள் குறித்து விசேட அவசர அறிவிப்பு!!

கனடாவில்(Canada) விமானப் பயணங்கள் குறித்து விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தின்(Toronto Pearson International Airport) விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தென் ஒன்றாரியோ பகுதியில் கடுமையான வெப்பநிலையுடன் காற்று பலமாக வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடும் வெப்பநிலை காரணமாக விமானப் பயணங்கள் திட்டமிட்டவாறு மேற்கொள்ள முடியாமல் போகலாம் என Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா திடீர் கொழும்பு பயணம்….. அதே நேரம் புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்!!

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09.07.2024) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனாவை மாற்றக்கூடாது மற்றும் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு கோரி நேற்றைய தினம்(08/07/2024) மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் குழப்பமான நிலையிலேயே அவர் தற்போது புதிய வைத்திய அத்தியட்சகராக நியமனம் பெற்றுள்ளார். இருநாள் விடுமுறையில் கொழும்பிற்கு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கொழும்பில் 67வது மாடியில் இருந்து விழுந்து மாணவன் மற்றும் மாணவி மரணம்….. அதிரடி உத்தரவிட்ட கோட்டை நீதிமன்றம்!!

கொழும்பு (Colombo) சொகுசு கட்டடமொன்றின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் மற்றும் மாணவியின் கையடக்க தொலைபேசியில் பொருத்தப்பட்டுள்ள சிம் அட்டைகள் தொடர்பான தொலைபேசி அழைப்பு தரவு பதிவுகளை காவல்துறையினருக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உயிரிழந்த மாணவன் மற்றும் மாணவியின் கையடக்கத் தொலைபேசி தரவு பதிவேடுகளை பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த மாணவனும் மாணவியும் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

நெல்லியடியில் திறந்துவைக்கப்பட்ட KFC அலைமோதும் மக்கள்!!

யாழ் பருத்தித்துறை வீதி நெல்லியடியில் இன்றைய தினம் (03/07/2024) KFC நிறுவனத்தின் கிளை திறந்துவைக்கப்பட்டது. திறந்த சற்று நேரத்தில் அதிகமான மக்கள் வருகை தந்து தங்களின் விருப்ப KFC சிக்கன் வாங்கி சென்ற வண்ணம் உள்ளார்கள். பலதரப்பட்ட முக்கியமான நகரங்களில் அமையப்பெற்றுள்ள KFC நிறுவனம் இப்போது அதிகளவான மக்கள் செறிந்து வாழும் வடமராட்சி பிரதேசத்திள் தங்களின் கிளையினை ஸ்தாபித்து வாடிக்கையாளர்களுக்கு KFC சிக்கன் விருந்தளித்துள்ளார்கள். திறந்து வைக்கப்பட்ட சற்று நேரத்திலையே அதிக மக்கள் குவிந்து KFC சிக்கன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வைத்தியசாலை விடுதிக்குள் தூக்கில் தொங்கிய வைத்தியர்….. வடமராட்சியில் சம்பவம்!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital – Point Pedro) பணிபுரிந்த வைத்தியர் ஒருவர் வைத்தியசாலை விடுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் இன்று (12/06/2024) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் கொழும்பு – வெள்ளவத்தையைச்(Wellawatte) சேர்ந்த 30 வயதுடைய கிருசாந் என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யுவதியொருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலையடுத்து Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

தனுஷ் நடிப்பில் திரையுலகை கலக்கிய Captain Miller திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைக்கவுள்ள பெரும் அங்கீகாரம்!!

தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கேப்டன் மில்லர். வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இந்த படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 10வது லண்டன் தேசிய விருதுக்கான ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அப்படத்தின் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….. வெளியான அறிவித்தல்!!

அனுராதபுரம் (Anuradhapura), மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல்(18/06/2024) 20ஆம் திகதி(20/06/2024) வரை மூடப்பட உள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பொசன் தினத்தை முன்னிட்டு  விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனுராதபுரம் உயர்தரப் பாடசாலை, ஸ்வர்ணபாலி Read More

Read More