விண்ணில் பெறவுள்ள மற்றோரு புதிய தொழிநுட்ப Silent Parker செயற்கைக்கோள்!!

விண்வெளி மையங்களை கண்காணிக்க சைலண்ட் பார்கர்(Silent Parker) எனும் உளவு செயற்கைக்கோளை அமெரிக்கா விண்ணில் செலுத்துகிறது. இந்த உளவு செயற்கைகோள் சீன அல்லது ரஷ்ய விண்வெளியில் உள்ள சுற்றுப்பாதையில் மற்ற செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி ஓடங்களை சேதப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. பூமியில் இருந்து குறைந்த சுற்றுப்பாதையில் ஜியோசின்க்ரோனஸ் சுற்றுப்பாதையில் இயங்கும் வகையில், இந்த சைலண்ட் பார்கர் பூமிக்கு மேலே 35400 கிலோமீற்றர் தொலைவில் நிறுத்தப்பட இருக்கிறது. எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குப் பிறகு Read More

Read more

குறைவடையும் கையடக்க தொலைபேசி விலைகள்!!

கையடக்க தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத், ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, தற்போதுள்ள தொலைபேசிகளின் கையிருப்பு முடிந்தவுடன் இறக்குமதி செய்யப்படும் புதிய தொலைபேசிகள் ஊடக மக்களுக்கு பலன் வழங்கப்படும் என்றும் Read More

Read more

232 பேருடன் டெல்லியில் இருந்து San Francisco சென்ற AI 173 விமானத்தில்….. நடுவானில் இயந்திர கோளாறு!!

டெல்லியில்(Dhelli to) இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு(San Francisco) புறப்பட்டு சென்ற AI 173 என்ற ஏர் இந்திய விமானம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. விமானம் ரஷ்யாவின் மகதன் விமான நிலையத்தில்  தரையிறங்கி உள்ளதுடன் பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளதாக இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், விமானத்தில் ஆய்வு பணிகள் Read More

Read more

முகமாலையில் மோட்டார்சைக்கிளை இடித்து தள்ளியது அரச பேருந்து….. ஒருவர் பலி – இரு சிறுவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!!

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று(24/05/2023) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று(24/05/2023) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை Read More

Read more

இலங்கையில் உச்சம் தொட்ட்து வெப்ப சுட்டெண்….. நாளை முதல் 39 – 45°C வரை அதிகரிக்கும்!!

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிகளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பச் சுட்டெண் அதிகளவில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரதேசங்களில் வெப்பநிலை 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் என அறிக்கையிடப்பட்டுள்ளது. இதேவேளை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் Read More

Read more

நடுக்கடலில் விழுந்து 228 உயிர்களை பறித்தது Airbus 330 விமானம்….. திடீரென திடுக்கிடும் உண்மைகள் வெளியீடு!!

கடந்த 2009 ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில்(Rio de Janeiro) இருந்து பிரான்ஸ்(France)இன் பாரிஸுக்குப்(Paris) பயணித்த Air France Airbus 330 விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விபத்திற்கு மார்க் டுபோயிஸ்(Mark DuBois)(வயது 58), டேவிட் ராபர்ட்(David Robert)(வயது 37), மற்றும் பியர்-செட்ரிக் போனின்(Pierre-Cédric Bonin) (வயது 32) ஆகிய விமானிகளின் நடத்தை முக்கிய காரணமாக அப்போது கூறப்பட்டது. இந்தநிலையில், நடுக்கடலில் விழுந்து 228 பேரின் உயிர்களை பறித்த ஏர்பஸ் 330 விமானத்தின் விமானி Read More

Read more

மீண்டும் ஜப்பான் கடற்பரப்பில் ஏவுகணையை பரிசோதித்தது வட கொரியா….. நிலையற்ற தாக்கம் என அமெரிக்கா எச்சரிக்கை!!

வட கொரியா மீண்டும் கடலோர நகரமான சின்போவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் உதவியுடன் ஏவுகணையை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியுள்ளது என்று தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் (JCS)தெரிவித்துள்ளனர். தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் இராணுவ பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏவுகணை ஏவப்பட்டு இருப்பதாக JCS தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், “கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில், நமது ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் முழு தயார் Read More

Read more

TikTok செயலி யில் ஒரு மணிநேரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய Update!!

18 வயதிற்குட்பட்டவர்கள் TikTok செயலியை ஒரு மணிநேரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான புதிய கட்டுப்பாட்டை கொண்டுவரப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பதின்ம வயதினர் நீண்டநேரம் இந்தச் செயலியை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய நடைமுறை வரவுள்ளது. இளைய தலைமுறை பயனாளிகளின் Digital எனப்படும் எண்ணியல் வாழ்வை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் வரவுள்ளதாக ரிக்டொக் அறிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திட்டத்தினால் 18 வயதுக்கு உட்பட்ட பயனாளிகளின் TikTok  திரைநேர கணக்குகள் Read More

Read more

பூமியுடன் மோத வாய்ப்புள்ள விண்கல்…..  நாசா அதிரடி அறிவிப்பு!!

2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை  நாசா பின்தொடர்ந்து வருகிறது. 2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 2 ஆம்  திகதி இவ்விண்கல் முதன்முதலில் அவதானிக்கப்பட்டது. இது 160 அடி (48.7 மீற்றர்) விட்டமுடையதாக இருந்தது என நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 18 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் Read More

Read more

“VEGA” ரக கார்களுக்கு கிடைத்தது இ. மோ. போ. திணைக்கள அங்கீகாரம்….. இன்று வழங்கப்பட்ட்து முதலாவது இலக்கத்தகடு!!

இலங்கையில் “VEGA Car” ரக கார்களுக்கு இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் ´VEGA´ காரிற்கான பதிவு இலக்கத் தகடு இன்று(03/03/2023) வழங்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார். இதன்போது, மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் “VEGA கார்” இனை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.

Read more