புகையிரத கழிவறையிலிருந்து மீட்கப்பட்டது பச்சிளம் குழந்தை!!

கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரத கழிவறையிலிருந்து பச்சிளம் குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று(10/03/2023) இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத  நிலையத்தில் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நிலைய அதிகாரிகள் காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read more

யாழில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி மரணம்!!

தெல்லிப்பழை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8 ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயதுடைய ஆண் ஒருவருடைய சடலமே இன்றையதினம்(11/03/2023) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. உறவினர்கள் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தவேளை, குறித்த நபர் தூக்கில் சடலமாக இருந்ததை அவதானித்தனர். அதனைத் தொடர்ந்து, தெல்லிப்பழை காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேத Read More

Read more

17 வயது யுவதியை தாக்கி துன்புறுத்திய வளர்ப்பு தாய் கைது….. காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சையில் யுவதி!!

ராகம, குருகுலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் யுவதி ஒருவரை தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அந்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் தாக்குதலுக்குள்ளான 17 வயது யுவதியின் வளர்ப்புத் தாய் எனவும், யுவதியின் தந்தை வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான குறித்த யுவதிக்கு காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள Read More

Read more

குழந்தையின் மூளைக்குள் “பிறக்காத இரட்டையரின் கரு”….. மருத்துவ உலகில் பாரிய அதிர்ச்சி!!

சீனாவில் ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் பிறக்காத இரட்டை குழந்தை கண்டெடுக்கப்பட்டது.   சீனாவில் உள்ள மருத்துவர்கள் ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் இருந்து “பிறக்காத இரட்டையரை” அகற்றியதாக தெரிவித்தனர்.   Neurology இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த வழக்கு முன்வைக்கப்பட்டது. குழந்தையின் தலை விரிவடைந்த நிலையில் மற்றும் உடல் இயக்க திறன்களில் (motor skills) சிக்கல்கள் இருப்பதாக அறியப்பட்டு, மருத்துவர்கள் ஸ்கேன் செய்துள்ளனர்.   அப்போது, குழந்தையின் மூளைக்குள் அதன் ‘பிறக்காத இரட்டையரின்’ கரு இருப்பது Read More

Read more

துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பல்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளன – மீண்டும் கொண்டுவர பேச்சுவார்த்தை….. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!!

இலங்கை துறைமுகத்திற்கு வந்திருந்த சரக்கு கப்பல்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போராட்டங்கள் காரணமாகவே, நாட்டிற்கு வருகை தந்திருந் 17 கப்பல்களும் திரும்பி சென்றுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத்  தெரிவித்த அவர், “கடந்த கால போராட்டங்களின் பெறுபேறாக துறைமுகத்திற்கு Read More

Read more

இலங்கை ரூபாக்கு சிறந்த செயற்பாட்டு நாணய பட்டம்….. எதிர்வரும் மாதங்களில் ரூபா பெறுமதி கடுமையான அழுத்தத்திற்குள்ளாகும்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான உலகளவில் சிறந்த செயற்பாட்டு நாணயமாக இலங்கை ரூபாய் மாறியுள்ளதாக பிரபல ப்ளூம்பெர்க் வணிக இணையதளம் குறிப்பிட்டுள்ளது. எப்படியிருப்பினும், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஒரு டொலர் சுமார் 390 ரூபாயாக பின்வாங்கும் என்று Fitch Ratings கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணம் பெறுவதற்காக, வரிச் சுமைகளை அதிகரிப்பதன் மூலமும், நிவாரணங்கள் குறைப்பத்துள்ளமையினால் இலங்கையின் ரூபாய் பெறுமதி அதிகரித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் வெளிநாட்டு கடன்களை செலுத்த ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரூபாவின் Read More

Read more

நேற்று முன்தினம் மனைவி, குழந்தைகளின் கழுத்து நெரிக்கப்பட்டு, கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்பு….. இப்போது புதிய திருப்பம்!!

வவுனியா குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக நேற்று முன்தினம்(07/03/2023) காலை மீட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முதல்நாள்(06/03/2023) இரவு அந்த வீட்டுக்கு ஹைஏஸ் வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்த வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் அது தொடர்பாக காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம்(07/03/2023) வவுனியா குட்செட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து கணவன், மனைவி, இரு பெண் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர். கணவர் தூக்கில் Read More

Read more

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு மற்றும் 2023 உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்க நேரிடும்….. கல்வி அமைச்சர்!!

நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும் எனவும், விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(09/03/2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தங்களின் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்காக நான் சமீபத்தில் ஒரு அதிகரிப்புக்கு அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்து அதற்கான அங்கீகாரத்தைம் பெற்றேன். Read More

Read more

இன்று நள்ளிரவு முதல் குறைவடைகிறது பாணின் விலை!!

450 கிராம் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இன்று(08/03/2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 450g பாண் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்று யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

Read more

குறைவடைந்தன வெள்ளை சீனி மற்றும் பருப்பு விலைகள்….. புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள்!!

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி 50 ரூபா முதல் 25 Read More

Read more