ஈவிரக்கமின்றி மக்களை கொன்ற ஆயுததாரி: சிதறி ஓடிய மக்கள்!

பிரித்தானியாவின் தென்கிழக்கில் போர்பரி பூங்காவில் இடம்பெற்ற கத்திக்குத்தில் 03 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

குறித்த பூங்காவில் வழக்கம் போல் மக்கள் கூடியிருந்த போது கூட்டத்துக்குள் புகுந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென சத்தமிட்டு தான் வைத்திருந்த கத்தியால் கண்ணில் தென்பட்ட மக்கள் மீது குத்தத் தொடங்கினார்.

இதனால் பூங்காவில் பெரும் பதற்றம் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இங்கிருந்த மக்களை சற்றும் ஈவிரக்கமின்றி, விரட்டிச் சென்று கத்தியால் குத்தினார். இந்த கொடூர தாக்குதலில் 03 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap