பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும்….. தலைவர் ஜயவர்தன!!
பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
டீசல், எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருந்த போதும்,
எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் கடந்த வாரம் 175 ரூபாயில் இருந்த பாணின் விலை 20/25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 200 ரூபாவாக காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.