போராட்ட குழுவால் வீதியில் கடும் வாகன நெரிசல்!!
பொரளை – பேஸ்லைன் வீதியை மறித்து குறித்த குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
லாஃப் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொடுக்குமாறு கோரி குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, உணவுப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி என சொல்லற்ற துன்பங்களை நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
டொலர் பிரச்சினை காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதனால்,
எரிவாயு நிறுவனங்கள் சடுதியாக விலை அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நிற்கின்றனர்.
எரிபொருள் வாங்குவதற்கு வரிசையில் நின்ற இரு சிரேஷ்ட பிரஜை இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன்,
நேற்றைய தினம் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.