முடிவுக்கு வந்தது பிக்பாஸ் அல்டிமேட்….. டைட்டிலை வென்றார் “பாலா”!!
நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்றது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய அந்த நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக முடிவடைந்துள்ளது.
24 மணி நேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை துவக்கத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
பின் சில காரணங்களால் அவர் விலகவே அவருக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த வார தொடக்கத்தில்,
பிக்பாஸ் வீட்டிற்குள் ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி ஆகியோரே இருந்த நிலையில் சமீபத்தில் அபிராமி மற்றும் அவரைத் தொடர்ந்து ஜூலி ஆகியோர் எலிமினேட் ஆனார்கள்.
இதைத்தொடர்ந்து நிரூப், தாமரை, பாலா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் மட்டுமே பைனலுக்கு சென்றனர்.
இறுதியில் அதிக வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை ‘பாலா’வென்றுள்ளார்.
மேலும்,
இரண்டாவது இடத்தை நிரூப் மற்றும் மூன்றாவது, நான்காவது இடத்தை ரம்யா, தாமரை ஆகியோர் பிடித்துள்ளனர்.