ஒருபுறம் தீ, மறுபுறம் மழை அவுஸ்திரேலியாவை உலுக்கும் காலநிலை!!
மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரேட் சதர்ன் பிராந்தியத்தில் காட்டு தீ மேலும் தீவிரமடையும் என மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக காட்டுத் தீயும், மழையும் வெளுத்து வாங்கி வருகிறது.
மேற்கு அவுஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது.
கடந்த ஜனவரியில் ஆறு நாட்களாக தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸூக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஜனவரி 13ஆம் திகதி அன்று நாட்டின் மிக உயரந்த வெப்பநிலையாக ஒன்ஸ்லோ பகுதியில் 50.7 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.
பொதுவாக கோடைக்காலத்தில்,
வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, காட்டுத்தீயும் வேகமாக பரவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளர் மில்டனர் ஸ்பியர் சின்ஹா கருத்து வெளியிடுகையில்,
வடமேற்கு அவுஸ்திரேலியா பகுதிகளில் வெப்பமண்டலத்தினால் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தின் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
கிழக்கு அவுஸ்திரேலியா கடற்கரையில் ஈரமான காற்றோட்டத்துடன், வளிமண்டல ஈரப்பதமாகவும் உள்ளது.
வடக்கு மற்றும் தென்கிழக்கு அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய மழை காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது.
புவி வெப்பமடைதல் காரணமாகவும் வெப்பநிலை அதிகரிக்கும்போக்கும் இருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.