அவுஸ்திரேலியா மீது கடும் அழுத்தங்களை பிரயோகிக்கும் சீனா

அவுஸ்திரேலியா நீண்ட கால வர்த்தக கூட்டாளியான சீனாவிடமிருந்து பெரும் அழுத்தங்களை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார உறவுகள் நீடித்தாலும் சீனாவின் விருப்பத்திற்கு எதிராக கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து உலகளாவிய விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதனால் கடந்த வாரம் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 04 மிகப்பெரிய மாட்டிறைச்சி நிறுவனத்தின் இறக்குமதிக்கு சீனா தடை விதித்திருந்ததுடன் ஏற்றுமதி செய்யும் பார்லிக்கு 80% வரியை விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விசாரணை கோரிக்கைக்கும் தாங்கள் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீனா கூறியுள்ளது.

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இத்தகைய சீனாவின் செயற்பாடுகள் கவலை அளிப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap