அதிகரிக்கும் கொரோனா தொற்று – அமைச்சரவை அளித்த அனுமதி
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளொன்றுக்கான பி சி ஆர் பரிசோதனை யை அதிகரிக்கவும் மருத்துவமனைகளில் உள்ள நோயாளர்களின் கட்டில்களின் எண்ணிக்கையை 3000 ஆக அதிகரிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளளது.
நாளொன்றுக்கு பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“நாங்கள் தற்போது ஒரு நாளைக்கு 20,000 சோதனைகள் செய்கிறோம். மேலும் சோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை அதிகரிக்க சுகாதார அமைச்சர் அனுமதி கோரினார், அதற்கான அனுமதி வழங்கப்பட்டது, ”என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.