மருத்துவமனையில் சுயநினைவின்றி மயக்கத்தில் அர்ச்சனா : மகள் சாரா வெளியிட்ட தகவல்!!

தொகுப்பாளினி அர்ச்சனாவின் உடல்நலை குறித்து அவரது மகள் சாரா தகவல் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் தான் அர்ச்சனா.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் வழக்கம் போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்த இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சமீபத்தில் தனக்கு மூளையில் சிறு பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறி ரசிகர்களை பிரார்த்தனை செய்யுமாறு கூறியிரு்நதார்.

இதன் காரணமாக பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் ஜாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை உறுதி கூறுகிறேன்.

இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி நான் மீண்டும் வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

தற்போது அர்ச்சனாவின் உடல்நிலை குறித்து அவரது மகள் சாரா தெரிவித்துள்ளதாவது. “அர்ச்சனாவுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், எனினும் அவர் இன்னும் கண் முழிக்க வில்லை. ஒரு வார காலம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.

அர்ச்சனாவின் தங்கையும், அவரது உடல்நிலைக் குறித்து பதிவிட்டுள்ளார். “அர்ச்சனா தற்போது சரியாகிவிட்டார். விரையவில் திரும்பி வந்துவிடுவார்'” என்று ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *