தீப்பற்றி எரிந்தது சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் கிடங்குகளில் ஒன்று!!

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரச எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூடா என்ற நகரில் அமைந்துள்ள அராம்கொ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் நேற்று(25/03/2022) பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதலால் எண்ணெய் கிடங்குகளில் தீ பற்றியுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு அருகில் சர்வதேச கார் போட்டிகளில் முதன்மையான formula one கார் போட்டி நடைபெறுவதாக இருந்தது.

குறித்த தாக்குதல் சம்பவத்தால் formula one கார் போட்டி நடைபெற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது.

அதேபோல்,

ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது.

இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடங்குகின்றது.

இதனால்,

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *