பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்த சிறுமி பாடசாலை வளாகத்தில் திடீரென மாயம்!!

அம்பாறை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி நேற்று(29/05/2022) மதியம் 2.30 மணியிலிருந்து மாயமாகி உள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அம்பாறை, கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்தே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை காவல் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.

 

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் போன சிறுமி நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க வதுர்தீன் பாத்திமா சஜானா என முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும்,

குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி,

பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலையில் சம்பவ தினமான நேற்று பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் திடிரென அவர் அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாகவும் பாடசாலை காப்பாளர் தெரிவித்துள்ளதாக காவல்துறை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம காவல்துறை பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான காவல்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை,

கடந்த 2022.05.23 இரவு அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்ற நிலையில் இரண்டு நபர்களால் இடைமறிக்கப்பட்டு அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு தூக்கிச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினை,

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எம் றிபாஸ்தீன் தனது முகநூலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

இச்சிறுமியை பலாத்காரம் செய்த  இருவரும் உறவினர்கள் என்பதுடன் உடந்தையாக உறவினர் ஒருவரின் தாய் உள்ளதாக அவரது முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

இச்சம்பவத்தில் தொடர்புபட்ட இரு சந்தேக நபர்களையும் அக்கரைப்பற்று காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *