அதிரடி Update கொடுத்த “அகிலன்” படக்குழு….. கொண்டாடும் ரசிகர்கள்!!

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்‘(Agilan).

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர்(Priya Bhavani Shankar) மற்றும் தான்யா ரவிச்சந்திரன்(Tanya Ravichandran) இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘அகிலன்‘ படத்தின் Firstlook Poster வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட்(Screen Seen Media Entertiment) தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

மேலும்,

இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில்,

இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது,

அகிலன்‘(Agilan) திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நாளை(04/03/2023) சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அகிலன்‘ திரைப்படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *