நடுக்கடலில் விழுந்து 228 உயிர்களை பறித்தது Airbus 330 விமானம்….. திடீரென திடுக்கிடும் உண்மைகள் வெளியீடு!!
கடந்த 2009 ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில்(Rio de Janeiro) இருந்து பிரான்ஸ்(France)இன் பாரிஸுக்குப்(Paris) பயணித்த Air France Airbus 330 விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்திற்கு மார்க் டுபோயிஸ்(Mark DuBois)(வயது 58), டேவிட் ராபர்ட்(David Robert)(வயது 37), மற்றும் பியர்-செட்ரிக் போனின்(Pierre-Cédric Bonin) (வயது 32) ஆகிய விமானிகளின் நடத்தை முக்கிய காரணமாக அப்போது கூறப்பட்டது.
இந்தநிலையில்,
நடுக்கடலில் விழுந்து 228 பேரின் உயிர்களை பறித்த ஏர்பஸ் 330 விமானத்தின் விமானி கடைசி நிமிடத்தில் கூறிய மூன்று வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த விமான விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்தபோது,
விமானத்தை செலுத்த வேண்டிய இருவர் ஒருவர் பின் ஒருவராக தூங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
விமான விபத்து குறித்த சட்ட விசாரணை பல ஆண்டுகளாக நீடித்த நிலையில்
தற்போது ஏர் பிரான்ஸ் மற்றும் Airbus ஆகியவை மனித படுகொலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம்,
குறித்த விபத்துக்கு விமானத்தின் விமானிகள் முழு பொறுப்பாளராக கருதப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட காக்பிட் உரையாடல்களில்(Cockpit conversation) விமானிகள் மூவரின் இறுதி உரையாடல்கள் திகிலூட்டுவதாக அமைந்துள்ளன.
நாங்கள் விபத்துக்குள்ளாக போகிறோம்! அது உண்மையல்ல! ஆனால் என்ன நடக்கிறது?” என விமானி ராபர்ட் பேசுவதை கேட்க முடிகிறது.
பின் விமானிகள் Robert அல்லது Bonin இருவரில் ஒருவர் யாரோ நாங்கள் இறந்து விட்டோம் என சொல்கிறார்.
இதன்பின்னர்,
நான்கு மணி நேரம் 15 நிமிடங்களில் விமானம் அட்லாண்டிக் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.