மீண்டும் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு!!

 நாடு முழுவதும் உள்ளூர் சந்தையில் லாஃப் (Laufs) மற்றும் லிட்ரோ(Litro) சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் தலைவர் டபிள்யூ.கே.எம்.வேகபிட்டிய (WKM Vekapitiya)தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக ரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப் (Laufs) சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச். வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

எனினும் நாளொன்றுக்கு 300 முதல் 400 தொன் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். வங்கிகளில் டொலர் கிடைக்காததால், எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடன் பத்திரங்களை பெற வங்கிகளை வணங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் வேகப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தமது நிறுவனம் வழமை போல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுத்து வருவதாகவும் லாஃப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், லிட்ரோ எரிவாயுவின் கேள்வி அதிகரித்துள்ளது எனவும் லிட்ரோ எரிவாயு  நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *