மீண்டும் மிஷ்கினுடன் இணைந்த அஜ்மல்!!
நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் நெற்றிக்கண் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அஜ்மல், மீண்டும் மிஷ்கினுடன் இணைந்திருக்கிறார்.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர் மிஷ்கின்.
இவர் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அஜ்மல் இப்படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜ்மல் ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் அஜ்மலுக்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்தது.
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் அஜ்மல் வில்லன் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.