மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை…. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண!!
அரிசி, சீனி, பால் மாவு மற்றும் உள்நாட்டு எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று கூறினார்.
தற்போது, அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
எனினும் “இது தொடர்பாக நாங்கள் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.
விநியோகச் சிக்கல்கள், இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்கு டொலர் பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற சீனி கையிருப்பு இரண்டரை மாதங்களுக்கு போதுமானது என்றும், நாங்கள் ஒரு கட்டத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, ஒரு கிலோ அரிசிக்கு அதிகபட்சமாக 98 ரூபாய் நிர்ணய விலையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், விவசாயிகள் தங்களின் நெல் விலையை உயர்த்தக் கோரி தற்போது போராட்டம் நடத்தி வருகின்றது.
இதேவேளை, கொரோனா காலக்கட்டத்திலும் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வந்தது.
சந்தைகளிலும், வர்த்தக நிலையங்களில் பால்மாவு போன்ற ஒரு சில பொருட்களுக்கு இன்றுவரை தட்டுப்பாடு நிலவுகின்றது.
இவ்வாறான நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் மீண்டும் மாற்றம் என்ற செய்தி பொதுமக்களுக்கு மேலும் மேலும் பேரிடியை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது.