பிரபல நடிகை விமலா ராமனை திருமணம் செய்யவுள்ள நடிகர் வினய்!!

 

பிரபல நடிகையை வினய் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் வினய்.

இவர் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து இருந்தார்.

அதன் பிரபலத்தின் மூலம் தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து இவர் ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதில் குரு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

பின்னர் பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் வினய் 2017 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியிருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் வில்லனாக கலக்கி கொண்டு வருகிறார்.

கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த டாக்டர் படத்திலும் வினய் அழகான, அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத வில்லனாக நடித்து இருப்பார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் வில்லனாக வினய் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார்.

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன் படம்.

இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெறுகிறது.

இதனை தொடர்ந்து வினய் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் வினய் நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் ‘ஓ மை டாக்’ என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,

வினய்க்கு கூடிய விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேற யாரும் இல்லைங்க, ராமன் தேடிய சீதை பட நடிகை விமலா ராமன் தான்.

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் விமலா ராமன்.

 

இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பொய் என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ராமன் தேடிய சீதை என்ற படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கடைசியாக சுந்தர் சி யின் இருட்டு என்ற படத்தில் தான் விமலா நடித்திருந்தார்.

இதனிடையே,

நடிகர் வினய் அவர்கள் சில ஆண்டுகளாகவே நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.

இருவரும் சேர்ந்து மாலத்தீவுகள் உட்பட பல்வேறு இடங்களில் விடுமுறைகளை என்ஜாய் பண்ணி கொண்டு எடுத்த புகைப்படங்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்கள்.

இந்நிலையில்,

இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால்,

இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

கூடிய விரைவில் இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *