வெளிநாட்டு வேலைக்கு செல்ல இருப்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

எந்தவொரு சாத்தியமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கும் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஒப்படைப்பதற்கு முன்னர் எந்தவொரு தனிநபரின் சட்டபூர்வமான தன்மை குறித்தும் அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

 

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் தற்போது அவர்கள் கைவசம் உள்ள வேலை வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் SLBFE இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ருமேனியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்புகள் குறித்து போலி விளம்பரங்கள் வெளியிடப்பட்டு மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *