ஏ9 வீதியை முடக்கினர் மீனவர்கள்……. அமைச்சர் டக்ளஸ் சென்றதால் பதற்ற நிலை!!

இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்றைய தினம் காடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துமீறும் இந்திய படகுகளை கைப்பற்றக் கோரியும், உயிரிழந்த இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஏ9 வீதி ஊடாக வருகின்ற வாகனங்களை மாற்று பாதையில் செல்லுமாறு கூறி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் கடற்தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதன் போது,

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என கடற்தொழிலாளர்களால் அமைச்சரிடம் கோரிகை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும் தான் வாய் மூலமான உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

பின்னர் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் கடற்தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *