ஏ-9 வீதியில் கோர விபத்து..!
ஏ 9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த கனரக வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (04) நள்ளிரவு 12 மணி அளவில் கனகராயன் குளத்திற்கும், மாங்குளத்திற்கும் இடையில் 212 வது கிலோமீற்றர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தை அடுத்து கனரக வாகனம் அங்கிருந்து சென்ற நிலையில் பொதுமக்கள் உதவியுடன் வானில் இருந்த 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு 1990 நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.