யாழில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி மரணம்!!
தெல்லிப்பழை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8 ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயதுடைய ஆண் ஒருவருடைய சடலமே இன்றையதினம்(11/03/2023) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தவேளை,
குறித்த நபர் தூக்கில் சடலமாக இருந்ததை அவதானித்தனர்.
அதனைத் தொடர்ந்து,
தெல்லிப்பழை காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.