FEATUREDLatestNewsTOP STORIES

திடீரென பாரிய வீழ்ச்சிகண்ட கோழி இறைச்சி!!

நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் முட்டைகளுக்கான கட்டுப்பாடு விலை நிர்ணயத்தை அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த விலையில்,

ஏற்பட்ட சிக்கல் காரணமாக முட்டை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தமது கோழிகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக,

சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 700 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தையில் முட்டையின் பல்வேறு விலைகள் காரணமாக முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அரசாங்கம் அண்மையில் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில்,

இதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து,

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டினை எட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சில உடன்பாடுகள் ஏற்பட்டாலும்,

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைக்கு சந்தையில் முட்டை விற்பனை செய்யப்படுவதில்லை என நுகர்வோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

மேலும்,

தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மீன்களின் விலைகளும் பாரியளவில் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Fresh salmon steak with a variety of seafood and herbs. On black rustic background

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *