இலங்கையிலும் மூன்று பகுதிகளில்….. சுமார் 3 மெக்னிடியூட் அளவு திடீர் நிலநடுக்கம்!!
இலங்கையில் வெல்லவாய, புத்தல, பெல்வத்த பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும்,
உயிர் அல்லது கட்டட சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் பயப்பட தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சிறு அளவிலான நில அதிர்வானது நாட்டிலுள்ள அனைத்து நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.