ஐந்து வயது சிறுவனை கொன்று தின்ற தாய்!!

இளம் பெண் ஒருவர் தனது மகனை கொன்று சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டை சேர்ந்தவர் ஹனா மொஹமட் ஹசன்(29/05/2023).

இவரது மகன் யூசுப்(வயது  5).

தாய் தனது மகனை தலையில் மூன்று முறை தாக்கி கொலை செய்துள்ளார்.

உடல் பாகங்களை ஒவ்வொரு இடத்திலும் புதைக்க அந்தப் பெண் திட்டமிட்டிருந்த நிலையில்

தனது மகனின் தலை மற்றும் பிற சதையை சமைத்து சாப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகக் கொலை செய்யப்பட்டவரின் மாமா அங்கே வந்துள்ளார்.

அங்கிருந்த வாளி ஒன்றில் உடல் உறுப்புகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போலீஸாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில்,

அவர் மன ரீதியாகப் பாதிக்கவில்லை என்பது உறுதியானது.

மேலும்,

மகன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது முன்னாள் கணவர் கூறுகையில்,

எங்கள் இருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆகிவிட்டது.

அவ்வப்போது மகனை சந்தித்து அவர்களுக்குத் தேவையானதை அளிப்பேன்.

ஆனால்,

என்னுடன் பேசுவதால் எங்கள் மகனையும் வெறுக்கத் தொடங்கினாள்.

இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தக் கொடூரத்தை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *