கிரிக்கெட் மைதான தகராறு….. இரும்புத் தடியால் தாக்கி, காலில் வெட்டி 30 வயது இளைஞன் கொலை!!

புத்தளம் நுரைச்சோலை காவல்துறை பிரிவிற்குற்பட்ட தழுவ பகுதியில் இரும்புத் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(30/04/2023) மாலை கிரிக்கெட் மைதானத்தில் இருவருக்கும் இடையில் தகராறு இடம்பெற்றுள்தாகவும் இதன்போது உயிரிழந்தவரின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,

நேற்று(30/04/2023) இரவு முதல் தாக்கப்பட்ட நபர் வீட்டிற்கு வரவில்லைமையின் காரணத்தினால் குறித்த நபரை வீட்டு உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

இதன்போது,

தாக்கப்பட்ட நபர் வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள மணல் திடலில் சடமாக காணப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில்,

சம்பவ இடத்திற்கு நுரைச்சோலைப் காவல்துறையினர் மற்றும் தடவியல் காவல்துறையினர் நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது,

தலையில் பொல்லால் தாக்கிய காயங்களும் காலில் வெட்டுக்காயங்களும் காணப்பட்டதாக தடவியல் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் பதுங்கிவிட்டதாகவும் மோப்ப நாயின் உதவியைக் கொண்டு சந்தேக நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை காவல்துறையினர் மற்றும் தடவியல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *