யாழ் – அச்சுவேலியில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் பருக்கப்பட்டு….. கூட்டு பாலியல் வன்புணர்வு!!

15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுபானம் பருக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டை பதிவு செய்த அச்சுவேலி காவல்றையினர் பாதிக்கப்பட்ட சிறுமியை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்து அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளனர்.

ஆனால் ,

நேற்று(20/03/2023) இரவு 8 மணிவரை,

சிறுமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையிலோ அல்லது தெல்லிப்பழை ஆதார மருத்துமனையிலோ அனுமதிக்கப்படவில்லை என நெருக்கமான வடடாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்

சிறுமியை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முற்படுத்த அச்சுவேலி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிக்கப்பட்டுள்ளது என மேலும் அறிய முடிகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் வேறெந்த செய்தியும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *