7000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

7000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
3டி கிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்51 மாடலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 7000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்51 சிறப்பம்சங்கள்
– 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஓ சூப்பர் AMOLED பிளஸ்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 ஜிபியு
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
– 12 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில்  கேமரா, f/2.2
– 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
– 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யுஎஸ்பி டைப்-சி
– 7000 எம்ஏஹெச் பேட்டரி
– 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் செலஸ்டியல் பிளாக் மற்றும் எலெக்ட்ரிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *