64 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனிற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 7 மற்றும் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம் ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. இத்துடன் ரியல்மி 7 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன், குவாட் கேமராக்கள், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் பிரத்யேக டூ-டோன் டிசைன் கொண்டிருக்கிறது. இவற்றுடன் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்களும் வெளியாகி உள்ளது.

ரியல்மி 7ஐ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
– அட்ரினோ 610 ஜிபியு
– 8 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– பின்புறம் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *