இளைஞரின் வயிற்றிலிருந்து 62 கரண்டிகள் மீட்பு….. பசி எடுத்தால் கரண்டியை சாப்பிடுவேன்!!

இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 62 கரண்டிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலம் மன்சூர்பூர் நகரத்தில் போபாடா கிராமத்தில் வசித்து வருபவர் விஜய்(32).

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலியால் துடிதுடித்து வந்துள்ளார்.

இதனால்,

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்டபோது அவரது வயிற்றில் விசித்திரமாக சில பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

அவரின் கடுமையான வயிற்று வலிக்கு அது தான் காரணம் என்பதை உறுதி செய்து இளைஞரின் ஒப்புதலைப் பெற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் துவங்கினர்.

அப்போது,

நோயாளியின் வயிற்றில் தலை இல்லாத Steel கரண்டிகள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து,

குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக……

ஒவ்வொரு கரண்டியாக மிகவும் கவனமாக அகற்றத் துவங்கினர்.

2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த அறுவை சிகிச்சையில் ஒட்டுமொத்தமாக 62 கரண்டிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

தற்போது,

ஐ.சி.யு வில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அவர்,

தனக்கு பசி எடுக்கும்போது உணவு கிடைக்காவிட்டால் கரண்டிகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார் என அந்த குறிப்பிடட சத்திர சிகிச்சையை மேற்கொண்டு வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *