2021 யமஹா எம்டி 09 எஸ்பி அறிமுகம்
யமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 09 எஸ்பி மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
யமஹா நிறுவனத்தின் 2021 எம்டி 09 எஸ்பி மோட்டார்சைக்கிள் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எஸ்பி மாடலில் ஸ்டான்டர்டு குரூயிஸ் கண்ட்ரோல், டபுள் ஸ்டிட்ச் செய்யப்பட்ட சீட், பிரஷ் மற்றும் க்ளியர் கோட் செய்யப்பட்ட ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் 890சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 115 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்போதைய எம்டி 09 மாடலில் 847சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 111 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் புதிய யமஹா எம்டி 09 எஸ்பி மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் யூனிட், ஸ்லைடு கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், 3.5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.
தற்சமயம் யமஹா எம்டி 09 மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் புதிய 2021 எம்டி 09 எஸ்பி எடிஷன் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.