“மாவீரர் வாரம்” இன்று முதல் ஆரம்பம்!!
தாயகப் பகுதியில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தத் தடை உத்தரவு ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் இன்று மாவீரர் வாரம் ஆரம்பமாகின்றது.
சிறிலங்கா அரசாங்கத்தின் தடை உத்தரவுகளுக்கு மத்தியில் இன்றைய தினம் (21) ஆரம்பிக்கவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படவுள்ளது.