வடமராட்சியை சேர்ந்த 19 வயது காதலி ‘அலரி விதை’ மற்றும் ‘மாத்திரைகள்’ சாப்பிட்டு தற்கொலை….. வலிகாமத்தை சேர்ந்த காதலனும் தற்கொலை முயற்சியால் அவசர சிகிச்சையில்!!

காதலி தற்கொலை செய்து கொண்டதை தாங்கமுடியாத இளைஞர்

தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி பகுதியை சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தவறான முடிவெடுத்த நிலையில்

கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இந்நிலையில்,

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து,

மரண விசாரணை அதிகாரிகள் போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

இதன்போது,

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் யுவதி சில மாத்திரைகளையும் அலரி விதைகளையும் உட்கொண்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,

காதலியின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத வலிகாமம் பகுதியை சேர்ந்த காதலனும்

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *