FEATUREDLatestNewsTOP STORIES

காதல் தோல்வியால் 17 வயது மகன் தூக்கு போட்டு தற்கொலை….. உடனேயே தன் உயிரையும் மாய்த்த தந்தை!!

பாடசாலை காதல் தோல்வியால் மாணவன் நேற்றையதினம்(18/09/2022) தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

மகன் தற்கொலை செய்து கொள்வதை கண்ட 53 வயது தந்தையும் இரசாயன பதார்த்தத்தை கலந்து குடித்து தனது உயிரை மாய்த்து கொண்டார்.

கேகாலை ரங்வல ஜபுன்வல பகுதியில் நேற்று(18/09/2022) இந்த சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு சாதாரணதர பரீடசை  முடிவுக்காக காத்திருந்த,

17 வயது மாணவன் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரை மாய்த்து கொள்வதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மாணவனின் தந்தை பொற்கொல்லர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர்,

குடும்பத்தில் இரண்டாவதாக இருந்த தனது மகன் உயிரை மாய்த்ததை அடுத்து

மனவேதனையில் இருந்ததுடன் பொற்கொல்லர் பயன்படுத்தும் இரசாயனப் பொருளைக் குடித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *