யாழில் மக்களால் உருவாக்கப்பட்ட சவுக்கம் காட்டை கையகப்படுத்த முயன்ற வனவளத் திணைக்களம்!!

யாழ்ப்பாணம் மணல்காடு சவுக்கமர காட்டினை ஸ்ரீலங்கா வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட்படுத்தி எல்லைக் கற்களை நடுவதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. எனினும் மக்களின் எதிர்பை தொடர்ந்து வன வள திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சவுக்கம் காடு 1963 ம் ஆண்டுக்குப் பின்னர் 1980 மற்றும் 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால், மற்றும் மக்கள் அமைப்புக்காளால் நாட்டி வளர்க்கப்படது. குறித்த சவுக்கம் காட்டுப்பகுதியில் பொழுது போக்கு மையம் 2016 ஆண்டு அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக ஏழு ஏக்கர் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த சவுக்கம் காட்டுப் பூங்கா தற்போது மணல்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் பராமரிப்பில் உள்ளதுடன் 2014 ஆண்டு மாவட்ட செயலாளரால் அனைத்து கிராம அபிவிருத்தி அமைப்புக்கள் முன்னிலையில் சமூக காடாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே நேற்றைய தினம் அங்கு சென்ற ஸ்ரீலங்கா வனவள திணைக்கள அதிகாரிகள் தமது ஆளுகைக்குட்படுத்தி எல்லைக் கற்களை நடுவதற்கு முயற்சித்துள்ளனர். இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக விசேட அதிரடி படையினரும் குறித்த மணல்காடு சவுக்க மர காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த வேளையிலேயே மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதை தொடர்ந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

குறித்த காடு தம்மால் நாட்டி வளர்க்கப்பட்டது என்றும் இதனை வனவள திணைக்களத்திற்க்கு தர முடியாது என்றும் மக்கள் ஏதிர்ப்பு வெளியிட்ட நிலையில் அதிகாரிகள் குறித்த இடத்திலிருந்து சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *