கோட்டாபயவின் கையொப்பத்துடன் வெளியானது வர்த்தமானி
அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட சமுக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சுக்கான கடமைப்பட்டியலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார்.
இந்த அமைச்சுக்கு ஏலவே இராஜாங்க அமைச்சராக உள்ள திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தமானியின்படி புதிய இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ்“பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக” சமூகப் பொலிஸ் சேவைகளின் கொள்கைகளை வகுப்பதில் உதவுதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சட்டங்கள், மற்றும் கட்டளைகள் மற்றும் தேசிய பட்ஜெட், தேசிய முதலீடு மற்றும் தேசிய மேம்பாட்டு திட்டங்களின் கீழ் திட்டங்களை செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ”.
முன்னுரிமைப்படுத்தப்பட்ட ஆறு பகுதிகள் வர்த்தமானியில் பட்டியலிடப்பட்டுள்ளன.